தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதையடுத்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சென்று வேலை செய்பவர்கள் தற்போது தங்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கள்ளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி சென்னையில் உறவினர் வீட்டுக்குச் சென்று சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று மன்னார்குடி அருகே அசோகம் பகுதியை சேர்ந்த 45 வயது நபருக்கும், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயது நபருக்கும், திருவாரூர் செம்மங்குடி பகுதியை சேர்ந்த 69 பெண் உள்பட திருவாரூர் மாவட்டத்தில் இன்று 12 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள். இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முருகன் சிறையில் 17ஆவது நாளாக உண்ணாவிரதம்