அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடங்கப்பட்டது.
கடன் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை - விவசாய கடன்
அரியலூர்: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான கடன் வழங்குவது குறித்த உத்திரவாதத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடன் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
அப்போது கூட்டுறவு வங்கிகள் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் விவசாயிகள் அதிகம் பயன்பெறக்கூடிய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான நகைக்கடன் மற்றும் பயிர்கடன் வழங்க தமிழ்நாடு அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சந்தர்ப்பவாத அரசியல்'- மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதிலடி!