தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'ஜூன் 30 வரை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம்' - மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப விலக்கு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் இம்மாத இறுதிவரை பணிக்கு வருவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

Tn government announced that physically challenged government employees leave
Tn government announced that physically challenged government employees leave

By

Published : Jun 3, 2020, 10:58 PM IST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் சிவப்பு மண்டலமாகவே இருக்கின்றன.


கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து (மார்ச் 24) கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வர விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த ஆணையைப் பிறப்பித்திருந்தது.


இந்நிலையில், மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் இம்மாத இறுதிவரை (ஜூன் 30) பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, தற்போது மீண்டும் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details