தமிழ்நாட்டில் பட்டியல் சாதி பிரிவிலுள்ள தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி உள்பட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தென்காசியில் தமமுகவினர் ஆர்ப்பாட்டம்! - TMMK Party
தென்காசி: தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டி கருப்புச்சட்டை அணிந்து தமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![தென்காசியில் தமமுகவினர் ஆர்ப்பாட்டம்! TMMK Party Protest In Tenkasi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:54:24:1599229464-tn-tki-02-tmmk-protest-arrest-7204942-04092020184616-0409f-1599225376-2.jpg)
TMMK Party Protest In Tenkasi
அந்த வகையில், தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தமமுக அமைப்பின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாண்டியன் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து விரைவில் அரசாணை வெளியிடக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காவல் துறையினரின் உரிய அனுமதி பெறாமல் நடத்தியதால் 30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.