திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 18) நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பூர் வருவோருக்கு தீவிர கரோனா பரிசோதனை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - Tirupur Visitors Intensive Coronal Examination
திருப்பூர்: வெளி மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வருவோர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள யாருக்கும் கரோனா தொற்று இல்லை. இருப்பினும், வெளி மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வருவோர் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் 1805 படுகைகள் தயார் நிலையில் உள்ளன. அரசின் திட்டங்கள் அனைவருக்கும் செல்லக்கூடிய வகையில் மாவட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.