தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சாலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிராம மக்கள்!

திருப்பூர்: கோயில் நிலத்தை காவல் துறைக்கு வழங்கியதால் பொங்கல் வைக்க இடமின்றி கிராம மக்கள் சாலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம்
இந்து அறநிலையத்துறை

By

Published : Dec 9, 2020, 2:49 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆண்டிப்பாளையம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 11.5 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டது.

திருவிழா கொண்டாட இடம் இல்லாததால் 7 கிராம மக்கள் அப்பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கார்த்திகை மாத பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபடும் நிகழ்விற்கு இடம் இல்லாததால் 6 கிராம மக்கள் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஒரு கிராம் மக்கள் மட்டும் திருவிழாவை நடத்தி சாலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details