திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் இன்று காலை திருப்பூரிலிருந்து காங்கேயத்திற்கு தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.
காங்கேயம் சாலை நாச்சிபாளையத்தை அடுத்த ரங்கபாளையம் அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக அவர் கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருசக்கரம் வாகனத்தை ஓட்டி வந்த ரங்கபாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் லிங்குசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், அவருக்கு பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூர் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த மிதுன், அவரது சகோதரி மெர்சிகா, தாய் ஜீவா ஆகிய மூவர் மீது மோதியதில் மிதுன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.