தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

டிக்டாக்கில் இளைஞரை மயக்கி ரூ.97,000 சுருட்டிய இளம்பெண்ணுக்கு வலைவீச்சு! - Madurai district News

டிக்டாக் வாயிலாகப் பழகி மதுரை இளைஞரிடம் 97 ஆயிரம் ரூபாய் மோசடிசெய்த இளம்பெண்ணை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

டிக் டாக் மூலம் மோசடி
டிக் டாக் மூலம் மோசடி

By

Published : Jun 9, 2020, 11:40 AM IST

மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கல்லூரியில் பயின்றுவருகிறார். 24 வயதான இவர் டிக்டாக் மூலம் திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற இளம்பெண்ணிடம் கடந்த ஓராண்டாகப் பேசி பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் பல்வேறு காரணங்களைக் கூறி சுசி, ராமச்சந்திரனிடமிருந்து சுமார் 97 ஆயிரம் ரூபாய் அளவிற்குப் பெற்றுக்கொண்டு அதனைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றிவந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் டிக்டாக் மூலம் மோசடியில் ஈடுபட்ட சுசி என்ற பெண்ணை வலைவீசித் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details