தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தயாராக உள்ள லாக்கப் - ஓடிடி தளத்தில் வெளியாவதாக தகவல்! - லாக்கப் ஓடிடி தளத்தில் வெளியாவதாக தகவல்

சென்னை: நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில், இயக்குநர் ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள க்ரைம் திரில்லர் படம் லாக்கப், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Thriller movie ready to be released on lockup - ODT site
Thriller movie ready to be released on lockup - ODT site

By

Published : Jun 29, 2020, 12:54 AM IST

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இதனால் கடந்த 3 மாதகாலமாக திரையரங்குகள் செயல்படவில்லை. இந்நிலையில் திரைக்கு வரத் தயாராக இருந்த படங்கள் சில ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியானது.

அந்த வகையில் 'டேனி' மற்றும் 'காக்டெய்ல்' ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதேபோல் நடிகர் நிதின்சத்யா தயாரிப்பில், இயக்குநர் ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள க்ரைம் திரில்லர் படம் லாக்கப்பும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கவில்லை.

ABOUT THE AUTHOR

...view details