தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஜம்முவில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு! - ஜம்மு காஷ்மீர்

ஜம்மு: பயங்கரவாதிகளின் மூன்று மறைவிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

three-militant-hideouts-busted-in-j-ks-shopian
three-militant-hideouts-busted-in-j-ks-shopian

By

Published : Jun 26, 2020, 6:17 AM IST

இது குறித்து ராணுவ அலுவலர் ஒருவர் கூறுகையில், "உளவுத் தகவலின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம் யார்வான் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளின் மூன்று மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த மூன்று மறைவிடங்களும் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

இதில், ஒரு மறைவிடம் அளவில் பெரியது. மற்றவை சிறியதாகும். இந்த மறைவிடங்களில், டைரி குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராணுவப் படைகளை விலக்கிக் கொண்ட சீனா!

ABOUT THE AUTHOR

...view details