திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திருநெல்வேலியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் தொற்று வேகமாக பரவி வருகிறது.
நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கரோனா உறுதி!
திருநெல்வேலி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நெல்லையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 410ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சலூன் கடை உரிமையாளருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 10) கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சலூன் கடைக்கு அருகே வாட்ச் கடை நடத்தி வரும் கொக்கிரகுளத்தைச் சேர்ந்தவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவரது மனைவி, 22 வயது மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின், மூவரையும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் இன்று அழைத்துச் சென்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.