திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி, செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா, புதுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா மற்றும் டெல்டா தனிப்பிரிவு காவல்துறையினர் இணைந்து புதுப்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: 3 பேர் கைது! - திருவண்ணாமலையில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருவண்ணாமலை: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து மூன்று செல்போன் ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
அப்போது கே.கே. பாளையம் பகுதியில் லாட்டரிச் சீட்டு விற்ற கார்த்திகேயன், மணி, சுரேஷ் ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
மேலும் விஷ்ணு 60, குமரன் 61, என் நிறம் 215, தங்கம் 329, குயில் 200, ரோசா 40, டீர் 80 என மொத்தம் 985 லாட்டரி சீட்டுகள், ரூ.610, 3 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றைத் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர்களிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.