தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய மூவர் கைது - விடுதி உரிமையாளர் தலைமறைவு! - மதுரையில் பாலியல் தொழில்

மதுரை : தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் மூன்று பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய மூவர் கைது - விடுதி உரிமையாளர் தலைமறைவு !
பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய மூவர் கைது - விடுதி உரிமையாளர் தலைமறைவு !

By

Published : Aug 27, 2020, 10:04 PM IST

மதுரை காக்கா தோப்பு தெருவில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் இரண்டு அறைகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு அதிரடியாக நுழைந்து, திடீர் சோதனையை காவல்துறையினர் மேற்கொண்டனர்.

அந்த சோதனையில், குறிப்பிட்ட விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவது உறுதிசெய்யப்பட்டது. பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விருதுநகரைச் சேர்ந்த குமார் (38), நாகர்கோவிலைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் (32), மதுரை திடீர் நகரைச் சேர்ந்த தசரதன் (49) ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த தகவலையறிந்த விடுதியின் உரிமையாளர் சிவக்குமார் தலைமறைவானதால், அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விடுதியில் இருந்து மீட்கப்பட்ட மூன்று பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details