விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோயில்புறையூர் அருகே வைக்கோலில் எரிசாராயத்தைப் பதுக்கிவைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வைக்கோலில் பதுக்கிப்வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
வைக்கோலில் பதுக்கிய சாராயம் பறிமுதல்! - ஆயிரத்து 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
விழுப்புரம்: செஞ்சி அருகே வைக்கோலில் பதுக்கிவைத்திருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வைக்கோல் போரில் பதுக்கிய சாராயம் பறிமுதல்!
மேலும் சாராயத்தைப் பதுக்கி வைத்திருந்ததாக கொடுக்கண்குப்பம் குமார், கோவில்புறையூர் பகுதியைச் சேர்ந்த சம்பத், திருமலை ஆகிய மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.