சிறுபான்மையினர் (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த, ஜெயின் பார்சி) வகுப்பினைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.
இக்கழகத்தின் கீழ் தனிநபர் தொழில் தொடங்க கடன் உதவி ரூ. 50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரையிலும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரையிலும் கல்விக் கடன் திட்டத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் குறுகிய கால உயர் திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூபாய் ஒன்பது லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆவின் நிறுவனத்தின் மூலமாக இரண்டு கறவை மாடுகள் வாங்கிட ரூபாய் 70 ஆயிரம்வரை மற்றும் ஆட்டோ கடன் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படுகிறது.