தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருவள்ளூர் ரயில் சுரங்கப்பாதை இந்த மாதத்தில் முடிவடையும் - ரயில்வே துறை - Railway Station Subway

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இந்த மாத இறுதிக்குள் சுரங்கப்பாதை முடிவடையும் நிலையில் உள்ளது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இந்த மாத இறுதிக்குள் சுரங்கப்பாதை முடிவடையும் - ரயில்வே துறை
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இந்த மாத இறுதிக்குள் சுரங்கப்பாதை முடிவடையும் - ரயில்வே துறை

By

Published : Jun 6, 2020, 2:33 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ரயில் நிலையம் திருவள்ளூர் ரயில் நிலையம்.

இந்த ரயில் நிலையம், சென்ட்ரலில் இருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது, திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு, அரக்கோணம் திருப்பதி மற்றும் மும்பை ஆகிய ஊர்களுக்கு செல்ல அனைத்து சிறப்பு ரயில்களும் நின்று செல்லக்கூடிய ரயில் நிலையமாக உள்ளது.

அப்படிப்பட்ட திருவள்ளூர் ரயில் நிலையமானது நெடுங்காலமாக சுரங்கப் பாதை இல்லாமல் இருந்து வந்தது. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்கப்பணி 1.50 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த வருடம் தொடங்கியது இந்நிலையில் தற்போது வைரஸ் தொற்று காரணமாக ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தண்டவாளங்களுக்கு கீழே பள்ளம் தோண்டி சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது இம்மாதம் இறுதிக்குள் இப்பணி முடிவடையும் அதன்பின் இறுதிகட்ட பணிகள் நடக்கும் அதுமட்டுமில்லாமல் சீக்கிரத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு இந்த சுரங்கப்பாதை வரும் என்று ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல் சீக்கிரத்தில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரயில் போக்குவரத்து தொடங்குவதற்குள் சீக்கிரமாக இந்த பணிகள் முடிவடைந்தால் திருவள்ளூர் ரயில் நிலையம் முன் மாதிரியான ரயில் நிலையமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details