திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவு பின்பற்றாமல் வெளியில் வந்த வாகனங்கள் மீது 24 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் - காவல் கண்காணிப்பாளர் - கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அதில் 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 372 மது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 23 ஆயிரம் சாராயம் பேரல்கள் அழிக்கப்பட்டுள்ளன. 576 கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படும் என்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் அவ்வாறு உத்தரவை கடைபிடிக்காதவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.