திருவள்ளூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சை கேட்கும் நபர்கள் ஏராளமானோர் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைத்த வட்டாட்சியர்! - Mentally ill people
திருவள்ளூர்: மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
அக்கோரிகையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் மகேஷ்வர குமார் உத்தரவின் பெயரில் வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில் திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் பெருமாள் மற்றும் அலுவலர்கள் அப்பகுதியில் பேருந்து மூலம் சுற்றினர்.
அப்போது பெரியகுப்பம் ரயில் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 30க்கும் மேற்பட்ட நபர்களை வாகனத்தில் ஏற்றி காப்பதற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைத்தனர். மேலும் இது போன்ற பணிகள் இன்னும் ஒரு வாரம் தொடரும் என்று வட்டாட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.