தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பெளர்ணமி கிரிவலம் ரத்து- பக்தர்கள் கிரிவலம் சென்றதால் பரபரப்பு! - Girivalam

மதுரை: ஊரடங்கு காரணமாக பௌர்ணமி கிரிவலத்தை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிர்வாகம் ரத்து செய்த நிலையில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thiruparankundram Mugrugan Temple Girivalam Issues
Thiruparankundram Mugrugan Temple Girivalam Issues

By

Published : Jun 6, 2020, 12:54 AM IST

கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்திருந்த நிலையிலும் கோயில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்கள் என ஆன்மீகம் சார்ந்த கோயில்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறவிருந்த பெளவுர்ணமி கிரிவலம் ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுவதாக இரு நாள்களுக்கு முன்பாகவே கோயில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் சென்று பூட்டப்பட்டிருக்கும் கோயில் வாசலிலும், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்து செல்கின்றனர்.

மேலும் கரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வரும் வேளையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கிரிவலம் சென்றதால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details