தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சேமித்த பத்தாயிரம் ரூபாயை கரோனா நிவாரணத்துக்கு வழங்கிய சிறுவர்கள்! - கோவிட்-19 நிவராண நிதி வழங்கிய நெல்லை சிறுவர்கள்

திருநெல்வேலி : கரோனா நிவாரண நிதியாக, தங்களது உண்டியல் சேமிப்பிலிருந்து பத்தாயிரம் ரூபாயை, இரண்டு சிறுவர்கள் மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கினர்.

சிறுக சிறுக சேமித்த பத்தாயிரம் பணத்தை கரோனா நிவாரணத்துக்கு வழங்கிய சிறுவர்கள்!
thirunelveli two small boys given ten thousand rupees for corona relief fund

By

Published : Jun 5, 2020, 6:02 AM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

பெரும்பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பொதுமக்கள் தங்களால் ஆன நிதியினை கரோனா நிவாரணத்திற்காக வழங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தன.

இதையடுத்து, பல்வேறு கட்சிகளும், நிறுவனங்களும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற நிதியினை அரசிற்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தைச் சேர்ந்த பால கணபதி விஜய் - தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகன்கள் பால ரிது மற்றும் பால ரிதிஸ் ஆகியோர் தங்களது பெற்றோர் அவ்வப்போது தந்த பணத்தை சேமித்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் தாங்கள் உண்டியல் வைத்து சேமித்து வைத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை, கரோனா நிவாரணத்துக்கு வழங்க முடிவு செய்து, அதனை நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணனிடம் நேரில் வழங்கினர்.

இந்தத் தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள காவல் துறை ஆணையர் சரவணன், 'அந்த சிறுவர்களிடம் எதிர் காலத்தில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்று கேட்டபோது, உங்களைப் போன்று காவல்துறை ஆணையராக விரும்புகிறேன்' என்று அந்த சிறுவர்கள் கூறியதாக, தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களின் மனித நேய செயலைப் பாராட்டி, நன்றி செலுத்தி சான்றிதழையும் ஆணையர் வழங்கினார்.

நெல்லையைச் சேர்ந்த இரு சிறுவர்கள், தங்களது சேமிப்பை கரோனா நிவாரண நிதியாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details