தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

’கரோனா தடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி: கரோனா தடுப்பு பணிக்கு மக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா தடுப்பு பணிக்குமக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்
கரோனா தடுப்பு பணிக்குமக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்

By

Published : Sep 18, 2020, 3:47 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் 5000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்படுகிறது. அதில் 492 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரத்தில் 6 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இதுவரை புதுச்சேரியில், 21,913 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அனைத்து அலுவலர்களும் மருத்துவ பணியாளர்களும் கோவிட் தடுப்பு பணிகளில், தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கு மக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details