தேனி மாவட்டத்தில் இன்று (செப்.02) உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 37 வயதுடைய காவலர், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 46 வயது தூய்மைப் பணியாளர் உள்பட 95 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தேனியில் இன்று மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி - தேனி மாவட்ட செய்திகள்
தேனி: அரசு மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர், காவலர் உள்பட 95 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 12 ஆயிரத்து 827ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், சின்னமனூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, தேனி சுப்பன் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவர், சங்கராபுரத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர், பெரியகுளம் வடகரையை சேர்ந்த 58 வயதுடைய நபர் என நான்கு பேர் இன்றுஉயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217ஆக அதிகரித்துள்ளது.