தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளியின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் திருட்டு - உளுந்தூர்பேட்டை அரசு பள்ளி
கள்ளக்குறிச்சி: ஊரடங்கைப் பயன்படுத்தி அரசுப் பள்ளியில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், கதவை உடைத்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருள்களைத் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளியில் 4 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருட்டு
பின்னர் அங்கிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், புரொஜெக்டர், டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களைத் திருடிச் சென்றனர். இது சம்பந்தமாக உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் விசாரணை செய்து அந்நபர்களைத் தேடிவருகின்றனர்.