மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது 2வது மகள் நிவேதா (26). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள மகா சுக்கிரன் என்ற நிதி நிறுவனத்தில் கணிப்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்! - The woman who tried to set fire
மதுரையில், மகளை கடத்தி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முன்றார்.
இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பணிக்கு சென்ற அவர். வீடு திரும்பவில்லை. எனவே நிதி நிறுவன உரிமையாளர் செந்தூர், ஆசை வார்த்தை கூறி நிவேதாவை கடத்தி இருக்காலம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த தாயார் லட்சுமி, குடும்பத்தாருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவர்களை காவல்துறையினர் தடுத்து அனுப்பி வைத்தனர்.