புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு ஒன்று, இலுப்பூர் திருச்சி சாலையில் உள்ளது. அங்கு இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், இங்கு கொட்டி வைக்கப்படுவது வழக்கம். இந்தக் குப்பைக் கிடங்கில் மாலை திடீரென புகை கிளம்பியுள்ளது.
குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலம்! - Bargaining garbage warehouse
புதுக்கோட்டை: இலுப்பூர் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இலுப்பூர் பேரூராட்சி பணியாளர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இது போன்று தீ விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. இது போன்று ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.