தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற அவலம் - Newborn baby

சென்னை: பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற அவலம்
பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற அவலம்

By

Published : Jul 14, 2020, 12:40 PM IST

Updated : Jul 14, 2020, 1:19 PM IST

சென்னை முத்தியால்பேட்டை ஆசிர்வாதபுரத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனால் அருகிலிருந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற அவலம்

பின்னர் குழந்தையை மீட்டு, முத்தியால்பேட்டை காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், குழந்தையை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் பிறந்த குழந்தையை வீசிச் சென்றவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Last Updated : Jul 14, 2020, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details