தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஈரோட்டில் இன்றுமுதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் மளிகைக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவை மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் கடைகள் 2 மணி வரை கடைகள் இயங்கும்
மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் இயங்கும்

By

Published : Jun 22, 2020, 12:19 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 80 நாள்களாக எந்தவொரு தொற்றும் இல்லாத நிலையில் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஈரோட்டில் நோய்பாதிப்பை குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் மளிகைக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என வணிகர்சங்கங்களின் பேரமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் ஜூலை 1ஆம் தேதி வரை இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் இயங்க அனுமதி - முதலமைச்சர் நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details