தேசிய மக்கள் சக்தி கட்சியின் வர்த்தகப் பிரிவு செயலாளர் தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், ”கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 18ஆம் தேதிக்குப் பின், தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அது சமயம் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரையிலான 54 நாள்களில் சொந்தத் தொழில்புரிபவர்கள், சிறு, குறு தொழில்கள் மேற்கொள்பவர்கள், தினக்கூலிகள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
மேலும், பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள பேரிடர் நிதியத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதை இம்மனுவில் சுட்டிக் காட்டியுள்ளேன். கரோனா தொற்று பரவல் தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்க வேண்டும்