தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்கள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அந்த மாவட்டங்களுக்குள் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, நோய் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகளவில் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குள் செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயம் என்றும், மாவட்டங்களுக்குள் சென்று வர எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ள ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்குள் சென்று வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாவட்ட, மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள 134 சோதனைச் சாவடிகளிலும் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.