தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தேனாம்பேட்டையில் கரோனா பாதிப்பு: 4,000 கடந்தது - சென்னை மாநகராட்சி மண்டலவாரி பட்டியலை வெளியிட்டுள்ளது

சென்னை: தேனாம்பேட்டையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்துள்ளது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தேனாம்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4000 தாண்டியது
தேனாம்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4000 தாண்டியது

By

Published : Jun 16, 2020, 11:53 AM IST

சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) அதி தீவிரமாகப் பரவிவருகிறது. அதைத் தடுக்க மாநகராட்சி முகக்கவசம், மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இருப்பினும் நோயின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் மாநில அரசு வருகின்ற 19ஆம் தேதிமுதல் 11 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

ராயபுரம், தண்டையார்பேட்டை போன்ற இடங்களில் ஏற்கனவே நான்காயிரத்தைக் கடந்துள்ள நிலையில் தற்போது தேனாம்பேட்டையிலும் கடந்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி மூன்றாயிரத்து 69 ஆக இருந்த எண்ணிக்கை ஐந்து நாள்களில் நான்காயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

அந்தப் பகுதியில் நோய்த்தொற்று அதிகரித்துவருவதால் 15 மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,

ராயபுரம் - 5364 பேர்

திரு.வி.க. நகர் - 2992 பேர்

வளசரவாக்கம் - 1413 பேர்

தண்டையார்பேட்டை - 4226 பேர்

தேனாம்பேட்டை - 4031 பேர்

அம்பத்தூர் - 1148 பேர்

கோடம்பாக்கம் - 3539 பேர்

திருவொற்றியூர் - 1224 பேர்

அடையாறு - 1885 பேர்

அண்ணா நகர் - 3330 பேர்

மாதவரம் - 894 பேர்

மணலி - 470 பேர்

சோழிங்கநல்லூர் - 615 பேர்

பெருங்குடி - 630 பேர்

ஆலந்தூர் - 670 பேர்

என 15 மண்டலங்களில் 33 ஆயிரத்து 244 நபர்கள் இந்தத் தீண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17ஆயிரத்து 275 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: திருவாரூரில் சட்டவிரோத செயல்களைத் தடுக்க ரோந்து வாகனங்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details