கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன், கடந்த 24 மணி நேரமாக 80 விழுக்காடு ஆக்சிஜன், உயிர்காக்கும் கருவி மூலமாக செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 67 விழுக்காடு வரை ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் - Tamil latest news
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஜெ. அன்பழகனுக்கு மே 3ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிர்காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், நேற்று (ஜூன்4) தனியார் மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜெ. அன்பழகன் உடலில் கடந்த 24 மணி நேரமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூன் 5) காலை நிலவரப்படி அன்பழகன் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தற்போது 67 விழுக்காடு ஆக்சிஜன், உயிர்காக்கும் கருவி மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.