ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திமுக கொடிக்கம்பத்தை அதே இடத்தில் வைக்க வேண்டும்: மனு அளித்த மாவட்ட திமுக நிர்வாகிகள் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்ட திமுக கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி மாவட்ட திமுக செயலாளர் ஆவடி ச.மு. நாசர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திமுக கொடி கம்பம் அதே இடத்தில் வைக்க வேண்டும்
திமுக கொடி கம்பம் அதே இடத்தில் வைக்க வேண்டும்
author img

By

Published : Sep 14, 2020, 7:57 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ், அந்தந்த பகுதி பொதுமக்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களை திமுக நிர்வாகிகள் வாங்கி வருகின்றனர்.

மாதந்தோறும் அந்த மனுக்களை மாவட்ட திமுக செயலாளர் ஆவடி ச.மு. நாசர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகிறார்.

அதன்படி இன்று செப்டம்பர் 14 மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், சுமார் 2000 மனுக்களை மாவட்ட திமுக செயலாளர் ஆவடி ச.மு. நாசர் வழங்கினார். குறிப்பாக மனுவில் திருவள்ளூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்ட திமுக கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மேலும் சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி முகவர்கள் 1,360 பெயர் பட்டியலையும் அவர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

அப்போது மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேசிங்கு, திருவள்ளூர் நகரச் செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றியத் தலைவர் ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details