தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா விதிமுறைகள் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை - Tamil latest news

நாகப்பட்டினம்: ஆட்டோக்களில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Auto drivers request
Auto drivers request

By

Published : Jun 9, 2020, 8:04 PM IST

கரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளுவது தொடர்பாக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாகை தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகை காவல் துணை கண்காணிப்பாளர் கலந்துகொண்டு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக அறிவுரைகளைக் கூறி விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

இதில் நாகை, நாகூர், வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 188 ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஓட்டுநர்கள் ஒருவரை மட்டும் ஆட்டோவில் ஏற்றிச் செல்வதால், தங்களுக்கு போதிய வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், கூடுதல் நபர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details