தஞ்சாவூர்:ஒரே நாளில் 145 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, தஞ்சையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று (செப்.12) ஒரே நாளில் மட்டும் 145 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் மொத்தாக இதுவரை 8 ஆயிரத்து 192 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து தஞ்சை மருத்துவமனையில் 815 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று(செப்.12) இரண்டு பேர் இறந்ததால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 104 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.