தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ. 335.73 லட்சம் 2020-2021ஆம் நிதி ஆண்டிற்கு நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களுக்கு இலக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் வீரிய ரக காய்கறிகளான கத்தரி, மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குழித்தட்டு நாற்றுகள் ஒரு எக்டருக்கு ரூ.20,000க்கான நிதியுதவியில், செடிமுருங்கை சாகுபடி விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு செடிமுருங்கை கன்றுகள் ஒரு எக்டருக்கு ரூ.10,000 என்ற நிதியுதவியில், அடர்நடவு முறையில் மா சாகுபடி செய்வதற்கு மா ஒட்டுக்கள் ஒரு எக்டருக்கு ரூ. 9,800 என்ற நிதியுதவியில், கொய்யா அடர்நடவு சாகுபடி செய்வதற்கு கொய்யா பதியன்கள் ஒரு எக்டருக்கு ரூ. 17, 600 என்ற நிதியுதவியில், திசுவாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு திசுவாழைக் கன்றுகள் ஒரு எக்டருக்கு ரூ.37,500 என்ற நிதியுதவி அளிக்கப்படும்.
தொடர்ந்து, மல்லிகை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மல்லிகை கன்றுகள் ஒரு எக்டருக்கு ரூ. 16,000 என்ற நிதியுதவியில், சம்மங்கி சாகுபடி செய்யும் விவசாயிகள் சாகுபடி செலவிற்காக எக்டருக்கு ரூ. 60,000 என்ற நிதியுதவியிலும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக மிளகு பயிரிட விரும்பும் விவசாயிகள் வேரிட்ட மிளகு கன்றுகள் ரூ. 20,000 என்ற நிதியுதவியில், தென்னந்தோப்புகளில் கொகோ ஊடுபயிராக சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் கொகோ கன்றுகள் ஒரு எக்டருக்கு ரூ.12,000 என்ற நிதியுதவியில், காய்கறி சாகுபடி விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு எக்டருக்கு ரூ. 2500 ஊக்கத்தொகை நிதியுதவியினையும் பெற்று பயனடையலாம்.
மேலும் திட்ட விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) தஞ்சாவூர் 9965362562, தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9943422198 ஒரத்தநாடு, திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9488945801, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9445257303 கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் தோட்டக்கலை உதவி இயக்குநர் 7299402881, பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் - 8526616956,
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9445257303 ஆகிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் கேட்டு கொண்டுள்ளார்.