தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்' - தமிமுன் அன்சாரி!

நாகப்பட்டினம்: ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு நிரந்தர தடை விதிக்க மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
Thamimun ansari

By

Published : Jul 5, 2020, 4:46 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல் துறையின் மாண்புகளை குலைப்பது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது என காவல் துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக பல ஜனநாயக சக்திகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.

சர்ச்சைக்குரிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வலுத்ததால் தமிழ்நாடு முழுக்க இதற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.

அதன் எதிரொலியாக இன்று (ஜூலை 5) தமிழ்நாடு முழுக்க ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை விதிப்பதாக தமிழ்நாடு காவல் துறை அறிவித்திருக்கிறது. இதை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வரவேற்கிறோம். மேலும் இந்த தடையை நிரந்தர தடையாக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைகளை பாதுகாத்து சட்டத்தின் வழியில் அனைவரும் கடமையாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். இதற்கு ஏற்பளிக்கும் வகையில் தமிழ்நாடு காவல் துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details