தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகம் படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில்தான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிகப்படியான கரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கரோனா தொற்று பரிசோதனை குறித்து பல்வேறு கேள்விகளை திமுகவினர் மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல்களை கேட்டு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் தலைமையில் திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனை சந்தித்து மனு அளித்தனர்.