தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முதலமைச்சர் நிதிக்கு ரூ.34 லட்சம் வழங்கிய டெக்னிப் இந்தியா நிறுவனம்! - டெக்னிப் இந்தியா நிறுவனம் முதலமைச்சர் நிதிக்கு 34 லட்சம் வழங்கல்

சென்னை: டெக்னிப் இந்தியா லிமிடெட் நிறுவனம், அலுவலர்கள் சார்பாக 34 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது.

Technip India ltd to donate Rs 34 lakh to CM's fund
Technip India ltd to donate Rs 34 lakh to CM's fund

By

Published : Jul 10, 2020, 4:47 AM IST

கரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் மீட்பு பணிக்காகவும், வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் நோக்கத்துடனும் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சென்னை கிண்டியை சேர்ந்த டெக்னிப் இந்தியா லிமிடெட் நிறுவனம், அலுவலர்கள் சார்பாக ரூ.34 லட்சத்து 48 ஆயிரம் காசோலையாக வழங்கியுள்ளது.

இந்த காசோலையை தமிழ் ஆட்சி மொழி, தமிழ்பாண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் முன்னிலையில் ச. கிருஷ்ணன் அரசு கூடுதல் தலைமைச் செயலாளரிடம் (நிதி) நேற்று (ஜூலை9) தலைமை செயலகத்தில் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது டெக்னிப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பி. வி. ரமணகுமார், நிர்வாக செயல் அலுவலர் பிரபாகரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details