தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2020, 9:03 PM IST

ETV Bharat / briefs

வட்டாரக்கல்வி அலுவலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துச்செல்ல தடை!

சென்னை : வட்டாரக்கல்வி அலுவலகத்திலிருந்து பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச்செல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

வட்டாரக்கல்வி அலுவலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துச்செல்ல தடை!
வட்டாரக்கல்வி அலுவலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துச்செல்ல தடை!

இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முழுவதும் தொடக்கம், நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு தேவையான 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான விலையில்லா புத்தகங்கள் நேரடியாக பள்ளிகளுக்கே சென்று விநியோகம் செய்ய வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் செயல்முறைகளின்படி, வட்டாரக்கல்வி அலுவலர்கள் அரசின் வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொண்டு நேரடியாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிடுகிறது.

மேலும் தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், புத்தகங்களை வட்டாரக்கல்வி அலுவலகத்திலிருந்து பள்ளிகளுக்கு எடுத்துச்செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details