ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகள் காலமாக நிலுவையில் உள்ளன.
இதனால், மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி ஓய்வு, பதவி உயர்வு, உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அரசு இந்த நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கரோனா பொது ஊரடங்கு காரணமாக, கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுழற்சி முறையில், பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை கைவிடக் கோரியும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.