தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் நன்றி - Teacher's Association Prisedent Elamaran

சென்னை: மேல்நிலைக் கல்வியில் பழைய முறையே தொடரும் என அறிவித்த அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Teacher's Association Thanks To TamilNadu Government
Teacher's Association Thanks To TamilNadu Government

By

Published : Jul 6, 2020, 5:14 PM IST

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்க மேல்நிலைக் கல்வியில் நான்கு முதன்மை பாடங்களை மூன்று முதன்மை பாடங்களாகக் குறைத்து பல நெறிமுறைகள் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடபட்டு 2020-21 கல்வியாண்டில் அமுல்படுத்த இருந்தது. இது11ஆம் வகுப்பிலேயே எதிர்காலத்தில் என்னவாக ஆகவேண்டும் தீர்மானிக்க வழிவகுத்தது.

ஆனால், அந்த வயதில் உளவியல் அடிப்படையில் சாத்தியமாகாது என்று உளவியல் அறிஞர்களின் கருத்தாகும். மேலும் பழைய பாடத்தில் கணித பாடப்பிரிவை எடுத்தால் மருத்துவமும், பொறியியல் படிப்பும் உயர்கல்வியில் தேர்வு செய்யமுடியும்.

புதியமுறையில் ஏதேனும் ஒரு படிப்பு தேர்வுசெய்யும் வகையில் முதன்மை பாடங்கள் நெறிமுறைகள் வழங்கப்பட்டிருந்தது. இதனால், உயர்கல்வியில் பல வாய்ப்புகள் குறையும். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி அரசாணையை ரத்து செய்து மேல்நிலைக்கல்விக்கு பழைய பாட நடைமுறையே தொடரும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்தை வரவேற்கிறோம்.

இதைத் தொடர்ந்து, ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் சத்துணவிற்கான தொகையினை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்ட முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details