மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளும் - அரசுக்கு வருவாய் இழப்பும்! - Closing of Tasmac in Tamil Nadu
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் அரசுக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு 2500 கோடி இழப்பு
By
Published : Apr 19, 2020, 9:53 AM IST
|
Updated : May 8, 2020, 11:41 PM IST
ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வரை தமிழ்நாடு அரசின் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம், நாள்தோறும் அரசுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்து வந்தது.
நிதியாண்டு
ஆண்டு வருவாய்
நாள் வருவாய்
2015-16
ரூ. 25,845.58 கோடி
ரூ. 70.80 கோடி
2016-17
ரூ. 26,995.25 கோடி
ரூ. 73.95 கோடி
2017-18
ரூ. 26,797.96 கோடி
ரூ. 73.41 கோடி
2018-19
ரூ. 31,157.83 கோடி
ரூ. 85.36 கோடி
2019-20
ரூ. 28,839.08 கோடி
ரூ. 79.01 கோடி
இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் திடீர் இழப்பு ஏற்பட்டது. இதனிடையே கரோனா தாக்கம் குறையாததால், மூன்றாவது கட்டமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
ஆனால் இம்முறை ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்திக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, கடைகளும் திறக்கப்பட்டு, மே 7ஆம் தேதி மட்டும் 170 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மூலம் மது பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன.
நாள்தோறும் சுமார் 100 கோடி ரூபாய் என சென்ற மார்ச் 25ஆம் தேதி முதல் கணக்கிட்டால் சுமார் 40 நாள்களுக்கு 4,000 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த வருவாய் இழப்பை சரிசெய்ய அத்தியாவசிய பொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.