கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
ஊரடங்கு மீறில்: 17 கோடியே 21 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்!.. - fine amount amid lockdown
சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை மீறியதாக எட்டு லட்சத்து 13 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து அபராதமாக சுமார் 17 கோடியே 21 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கு மீறில்: 17 கோடியே 21 லட்சம் ரூபாய் வசூல்!..
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 104 நாள்களில் ஊரடங்கை மீறியதாக எட்டு லட்சத்து 13 ஆயிரத்து 877 பேரை காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. ஆறு லட்சத்து 21 ஆயிரத்து 384 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறுபவர்களிடம் இருந்து இதுவரை 17கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 131 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.