தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணியாற்றலாம்- தமிழ்நாடு அரசு

சென்னை:அரசு அலுவலகங்களில் 33%க்கு பதில் 50% ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Jul 6, 2020, 3:37 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது

வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இடையே உள்ள இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக 33 விழுக்காடு ஊழியர்களுடன் அலுவலக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்துது.

ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50% அரசுப் பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் சுழற்சி முறையில் இயங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன் அரசு அலுவலகங்களில் 33 விழுக்காடு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணி செய்திருந்தனர். மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details