தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கான வாகனங்களுக்கு மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து அனுமதி பெறப்பட்டுவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக பரிசோதனை மையம் தொடங்குவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 112 மையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் இன்று 51 ஆயிரத்து 640 நபர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டில் இருந்த நான்காயிரத்து 902 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்பிய 77 பேருக்கும் என மொத்தம் நான்காயிரத்து 979 பேருக்கு இன்று நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 18 லட்சத்து 55 ஆயிரத்து 817 நபர்களுக்கு கரோனா வைரஸ் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது. நோய் கண்டறியப்பட்டவர்களில் தற்போது 50 ஆயிரத்து 294 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் இன்று நான்காயிரத்து 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 915 நபர்கள் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் இன்று 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் மாநிலத்தில் இரண்டாயிரத்து 481 உயிரிழந்துள்ளனர்.
இன்று சென்னையில் 1254 பேரும், திருவள்ளூரில் 405 பேரும்,செங்கல்பட்டில் 306 பேரும், விருதுநகரில் 265 பேரும், காஞ்சிபுரத்தில் 220 பேரும், மதுரையில் 206 என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து, மாநில சுகாதாரத் துறை மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னை -85, 859
செங்கல்பட்டு- 9, 658
திருவள்ளூர் -9,110
மதுரை-8,251
காஞ்சிபுரம் -4,739
வேலூர் -3,948
திருவண்ணாமலை -3,916
தூத்துக்குடி - 3,441
விருதுநகர் -3,393
தேனி -2, 494
ராமநாதபுரம் -2,442
கன்னியாகுமரி -2,318
கள்ளக்குறிச்சி -2,299
சேலம் -2,295
திருநெல்வேலி -2,265
திருச்சிராப்பள்ளி -2,265