தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பல்வேறு திட்டங்களை திறந்து வைத்த முதலமைச்சர் - சாலை உள்கட்டமைப்பு வசதி

சென்னை: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பல்வேறு திட்டப்பணிகளை திறந்துவைத்த முதலமைச்சர்!
பல்வேறு திட்டப்பணிகளை திறந்துவைத்த முதலமைச்சர்!

By

Published : Jul 14, 2020, 9:45 PM IST

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை மற்றும் சென்னை முதல் செங்கல்பட்டு வரையிலான 217 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்..

மேலும், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 31 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் மற்றும் இரண்டு அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் 28 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதைப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், குரோம்பேட்டை, இராதா நகரில் 28 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண் 27-க்கு மாற்றாக இரயில்வே கி.மீ. 25/3-4ல் கட்டப்படவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details