கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊரடங்கு மீறல் : 13 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் - சென்னை மாவட்ட செய்திகள்
ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் 13 கோடியே 12 லட்சத்து மூன்றாயிரத்து 674 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
![ஊரடங்கு மீறல் : 13 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் Tamilnadu case report](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-curfew-violation-fine-1706newsroom-1592375107-792.jpg)
Tamilnadu case report
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 85 நாட்களில் தமிழ்நாடு காவல்துறை தடையை மீறியதாக 6 லட்சத்து 51 ஆயிரத்து 426 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. 4 லட்சத்து 76 ஆயிரத்து 347 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
Last Updated : Jun 17, 2020, 2:02 PM IST