தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவின் ஆய்வுக்கூட்டம்! - அரசு உறுதிமொழிக்குழு தலைவர் இன்பதுரை

சென்னை : தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழுத் தலைவரும் ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இன்பதுரை தலைமையில் நடைபெற்றது.

சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் ஆய்வுக்கூட்டம்!
சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் ஆய்வுக்கூட்டம்!

By

Published : Sep 4, 2020, 6:36 PM IST

சென்னையிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று அரசு உறுதிமொழிக்குழுத் தலைவரும் ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இன்பதுரை தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் அமலாக்கத் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்பதுரை எம்எல்ஏ தலைமையிலான குழு ஆய்வுசெய்தது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலர்கள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஜெயஶ்ரீ ரகுநந்தன், உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை செயலர் ஸ்வர்ணா, தொழில்நுட்ப கல்வித் துறை ஆணையர் விவேகானந்தன், முனைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்று விளக்கமளித்தனர்.

இது கரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் குழு ஆய்வுக்கூட்டம் என்பது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details