தமிழ்நாடு நிதித் துறை சார்பில் 02.07.2020ஆம் நாள் வெளியிட்ட 205 (L)/W&M-II/2010 அறிவிக்கையின் வரையறைகளின்படி வழங்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்குரிய 8.16 விழுக்காடு தமிழ்நாடு அரசுப் பங்குகள் தொகையின் நிலுவைத் தொகையானது, ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும்.
எந்த மாநில அரசால், 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், மேற்சொன்ன நாள்களில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருப்பின், அந்த மாநிலத்தின் தொகை செலுத்தும் அலுவலகங்களில் முந்தைய அலுவலகப் பணி நாளில் திருப்பிச் செலுத்தப்படும். நாளையும்(ஜூன் 7) அதற்கு பின்னரும் இக்கடனுக்கு வட்டித்தொகை சேராது.
மேலும் 2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திரங்களின் ஒழுங்குமுறை விதிகளிலுள்ள 24(2) மற்றும் 24(3)ஆம் துணை ஒழுங்குமுறை விதிகளின்படி, பொது துணை பேரேட்டு படிவத்தில், மூலப் பொது துணைப் பேரேட்டு கணக்கில் அல்லது பங்கு முதல் சான்றிதழில், அரசு கடன் பத்திரங்களை வைத்திருக்கும் பதிவு பெற்ற நபர் ஒருவருக்கு, அவருடைய வங்கி கணக்கில் அல்லது மின்னணு பதிவு மூலம் நிதிகளை வரவு வைக்கும் வசதியுள்ள வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அவருடைய வரவுக் கணக்கில் உரிய விவரங்களை சேர்த்து, தொகை செலுத்துவதற்கான ஆணை வழங்குவதன் மூலம் முதிர்வுத் தொகை வழங்கப்படும்.
கடன் பத்திரங்களை பொறுத்தமட்டில், தொகை செலுத்தும் நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப அசல் சந்தாதாரர் அல்லது இத்தகைய அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர் வட்டித்தொகை செலுத்துவதற்காக முகப்பிடப்பட்டுள்ள/பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிக்கு அல்லது கருவூலத்திற்கு மற்றும் சார் கருவூலத்திற்கு அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு நேர்விற்கேற்ப அவர்களுடைய வங்கிக் கணக்கின் உரிய விவரங்களை அளிக்க வேண்டும்.