தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஓடிடி தளத்தில் வெளியாகும் சுஷாந்த் சிங்கின் கடைசி படம் - சுஷாந்த் சிங்

நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'தில் பெச்சாரா' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sushant Singh Rajput's
Sushant Singh Rajput's

By

Published : Jun 25, 2020, 7:07 PM IST

மன அழுத்தம் காரணமாக நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள தனது வீட்டில் ஜூன் 14ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது மறைவு பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள படம் 'தில் பெச்சாரா'. இத்திரைப்படம் மே மாதம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இத்திரைப்படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், "ஜூலை 24ஆம் தேதி ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியாகவுள்ளது. சுஷாந்த் சிங்கின் மறைவை முன்னிட்டு, இந்தப் படத்தை இலவசமாகக் காணலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் சைஃப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க:'காலம் காயங்களை மறக்க செய்யும் என்பது பொய்'- சுஷாந்த் பட நாயகி உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details